ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 30 ஜனவரி, 2023
தீண்டாமை உறுதிமொழி.....
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.01.2023) அண்ணல் காந்தியின் 76 வது நினைவு நாள், *தீண்டாமை உறுதி மொழி* மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அண்ணல் காந்தியின் தியாக மிக்க பணிகள் பற்றியும், அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் குறித்தும், தீண்டாமைக்கு ஒழிக்க பாடுபட்டதையும் விரிவாக விளக்கினார்.
பின்னர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு.அனிதா ஆகியோரும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக