செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

தேசிய அறிவியல் நாள் விழா.......

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2023) தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திரு ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், பூ. இராம்குமார் ஆகியோர் நிகழ்வு குறித்து கருத்துரை வழங்கினர். நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்கள் தனது உரையில் இன்றைய நாளின் முக்கியத்துவம் குறித்தும், தேசிய அறிவியல் நாளாக பிப்ரவரி 28ஐ இந்திய ஒன்றிய அரசு அறிவிக்க காரனமாக அமைந்த நிகழ்வான ”இராமன் விளைவு” வெளியிடப்பட்ட நாள் குறித்தும், இதற்காக உலகின் உயரிய நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் சர்.சி.வி இராமன் குறித்தும் விரிவாகப் பேசினார். பின்னர் மாணவர்கள் தாமே தயாரித்து கொண்டு வந்திருந்த அறிவியல் ஆய்வுப் படைப்புகளை காட்சிப்படுத்தி அவற்றைப் பற்றி விளக்கிய விதம் சிறப்பாக அமைந்தது. 6 முதல் 8 வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் 21 படைப்புகளை கொண்டு வந்து காட்சிப்படுத்தி அனைவருக்கும் விளக்கினர். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.. இறுதியில் பள்ளியின் தற்காலிக உதவி ஆசிரியர் திருமதி ம. யோகப்பிரியா அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக