ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (02.01.2023) வானவில் மன்றம் துவக்க விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இம்மன்றத்தின் நோக்கம் மற்றும் மாணவர்கள் அறிவியல் பாடத்தை எளிய சோதனைகள் மூலம் கற்பதன் அவசியம் ஆகியன பற்றி விரிவாக விளக்கினார்.
பின்னர் நிகழ்வில் சிறப்புப் பயிற்சியாளராகப் பங்கு பெற்ற திருமதி ச. ஜான்சி அவர்கள் மாணவர்களுக்கு எளிய சோதனைகள் வழியே காற்றின் பண்புகள், திட, திரவ, வாயுப் பொருட்களின் பண்புகள் ஆகியவற்றை விளக்கினார். இதில் அனைத்து மாணவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் திரு ச. மஞ்சுநாதன், திருமதி மா. யோகலட்சுமி ஆகியோரும் மாணவர்களும் பங்கேற்றனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வெ சண்முகம் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக