திங்கள், 30 ஜனவரி, 2023

தீண்டாமை உறுதிமொழி.....

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (30.01.2023) அண்ணல் காந்தியின் 76 வது நினைவு நாள், *தீண்டாமை உறுதி மொழி* மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அண்ணல் காந்தியின் தியாக மிக்க பணிகள் பற்றியும், அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் குறித்தும், தீண்டாமைக்கு ஒழிக்க பாடுபட்டதையும் விரிவாக விளக்கினார். பின்னர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு.அனிதா ஆகியோரும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.

வியாழன், 26 ஜனவரி, 2023

இந்திய குடியரசுநாள் விழா 2023...

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (26.01.2023) இந்திய குடியரசுநாள் விழா நடைபெற்றது.. முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். பள்ளி உதவி ஆசிரியர் மா. யோகலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் பள்ளியில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் குடியரசுநாள் பற்றியும், சுதந்திர நாளுக்கும் குடியரசு நாளுக்கும் இடையே உள்ள வேறுபாடு பற்றியும், இவ்விழாக்களை தேசிய விழாவாக கொண்டாடப்படும் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2023

பொங்கல்விழா.....


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று 13.01.2023 பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் அனைவரும் பலவண்ண புத்தாடைகளை அணிந்து வந்து மகிழ்வை வெளிப்படுத்தினர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பள்ளியில்  பொங்கல் வைக்கப்பட்டு  மதிய உணவாக அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வாழை இலையில் பரிமாறப்பட்டது. பின்னர் அனைத்து மாணவர்களும் செங்கரும்பு உண்ணும் நிகழ்வு வெகு நேர்த்தியாக நடைபெற்றது. 
நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன், உதவி ஆசிரியர்கள் வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அனிதா, சிறப்பு ஆசிரியர் வெ. காமாட்சி, கெகபிராம்பட்டி உதவி ஆசிரியர் வீரபத்திரன், சத்துணவு அமைப்பாளர் பீமன், உதவியாளர் சௌந்தரியா ஆகியோரும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.