செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஊத்தங்கரை பலவகை தொழிற்நுட்பக் கல்லூரியில் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா.......


காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் விழா……

இன்று (01.10.2019) ஊத்தங்கரை அரசு பலவகை தொழிற்நுட்பக் கல்லூரியில் அண்ணல் காந்தியின் 150வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் மகாத்மா காந்தியின் திருஉருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கல்லூரியின் முதல்வர் திருமதி எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி விரிவுரையாளர் திரு ஏ. செல்வராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் கல்லூரி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களின் திறமையை பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல், ஓவியம், ஓரங்க நாடகம், தனியாள் வேடம், நழுவக் காட்சி (slide show) மற்றும் மாதிரிகள் செய்தல் போன்றவை மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவில் தலைமை விருந்தினர்களாக ஜோதிநகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி பரிமளா ஆகியோரும், சிறப்பு அழைப்பாளர்களாக அத்திப்பாடி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு முருகன், ஊத்தங்கரை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு கு. கணேசன் ஆகியோரும் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தமது சிறப்புரைகளின் மூலம் தெரிவித்தனர்.

இறுதியில் கல்லூரியின் பகுதி நேர விரிவுரையாளர் திருமதி தீபிகா அனைவருக்கும் நன்றி கூறினார்.




























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக