ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2022) நடைபெற்ற ”75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா” பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா குறித்து உரையாடினார். பின்னர் மாணவர்கள் 75வது சுதந்திர நாளை குறிப்பிடும் வகையில் கையில் மூவர்ண கொடியை ஏந்திக்கொண்டு இந்தியா வரைபடம் போல நின்றனர். அதன் மத்தியில் மாணவர்களாலேயே 75 என்ற எண்ணும் காட்டப்பட்டது. இந்நிகழ்வு அனைத்து பெற்றோர்களையும் மாணவர்களையும் மிகவும் கவர்ந்தது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில், 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா குறித்து விரிவாகப் பேசி, நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலத்தி நன்றி தெரிவிக்கவே இது போன்ற விழாக்கள் எனக்கூறி முடித்தார், தொடர்ந்து பேசிய அவர் கொரோணா காலகட்டத்திற்கு பின்னர் பள்ளி திரும்பியுள்ள மாணவர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதை மடை மாற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் மாணவர்கள் சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை ஓவியம் பாடல், கவிதை போன்ற பலவகைகளில் தமது திறன்களை வெளிப்படுத்துனர். அதைத் தொடர்ந்து மாண்வர்கள் பலவண்ண ஆடை உடுத்தி தேசபக்தி மற்றும் நாட்டுபுறப் பாடல்களுக்கு நடனம் ஆடினர்.
அதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்
நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி உள்ளிட்ட பெற்றோர்கள், கோகிலா உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக