ஊத்தங்கரை
ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.07.2022) கர்மவீரர் கு. காமராஜ் அவர்களின்
120வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி
நாள் விழா, சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, சாய் அண்ணபூர்ணா அறக்கட்டளையின் சார்பில் மாணவர்களுக்கான தினசரி சிற்றுணவு
வழங்கும் நிகழ்வின் துவக்கவிழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளித்
தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து
பள்ளி மாணவர்கள் காமராசர் பற்றியும் அவரின் அரிய பணிகள் பற்றியும் தமிழ் பேச்சு, ஆங்கில
பேச்சு, கவிதை ஆகிய வடிவங்களில் வழங்கினர்.
பின்னர் விழாவுக்கு தலைமையேற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்
இன்றைய சிறப்பு நாளான கல்வி வளர்ச்சி நாள் பற்றியும், கர்ம வீரர் காமராஜரின் கல்விப்
பணிகள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து இவ்விழாவில் சிறப்பு
விருந்தினராகக் கலந்துக் கொண்ட சத்யசாய் அண்ணபூர்ணா அறக்கட்டளையின்
ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன் அவர்கள்
மாணவர்களின் கல்வி மற்றும் திறன் வளர்ச்சியில் உணவின் பங்கு பற்றி எடுத்துக் கூறி,
அதற்காகத்தான் பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற
சிற்றுணவு வழங்கப்படுகிறது என்றார்.
பின்னர் பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்,
இன்றைய நிகழ்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்ப்ட்டு ஆனைவருக்கும்
இனிப்பு வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி ஆசிரியர் திரு ச. மஞ்சுநாதன், அனைவருக்கும் நன்றி கூறினார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக