வியாழன், 14 ஜூலை, 2022

மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் துவக்கி வைத்த சதுரங்கப் போட்டி...


  ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (14.07.2022)  பள்ளி அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் திரு சே. சதீஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் ஊத்தங்கரை வட்டாட்சியர் திரு சி. கோவிந்தராஜ் அவர்கள், கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

   முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சதுரங்கப் போட்டி தொடர்பான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார்.

     இன்றைய போட்டியில் 6 – 8 வகுப்பு ஆண்கள் பிரிவில் க. நவீன்குமார், ஜெ. சஞ்சய் ஆகியோரும், பெண்கள் பிரிவில் ச. ஆராதனா, இர. சரண்யா ஆகியோரும்  ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.

    1 – 5 வகுப்பு ஆண்கள் பிரிவில் ம. குரு, ச. சித்தார்த் ஆகியோரும், பெண்கள் பிரிவில் சு. தமிழரசி, கோ. அகிலா ஆகியோரும் தேர்வு பெற்றனர்

                                             
    போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன், 
பூ. இராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்...    










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக