புதன், 29 ஜூலை, 2026

மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அவர்கள் பள்ளிப் பார்வை...

ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) திரு பொ. சௌந்தர்ராஜன் அவர்கள் இன்று பார்வையிட்டார். பார்வையின் போது மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார். மேலும் சுற்றுபுற சுகாதாரம், ஆசிரியர்/மாணவர் உறவு குறித்தும் ஆசிரியர்களோடு கலந்துரையாடினார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்று வரும் மாணவர்கள் திறன் மேம்பாட்டிற்கான NMMS தேர்வு விழிப்புணர்வு, கலைத்திருவிழா, மன்றப் போட்டிகள், பாடம் சாரா செயல்பாடுகளான சாரணர் இயக்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுச் சூழல் மன்றச் செயல்பாடுகள் ஆகியவற்றை பற்றி கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி காலை உணவு, மதிய உணவுத் திட்ட செயல்பாடுகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். உடன் ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலர்கள் திருமதி மு. சாந்தி, முனைவர் திரு க. பழனிச்சாமி ஆகியோர் வந்து மாணவர்களை ஆய்வு செய்தனர். \
u003Cdiv class=\"separator\" style=\"clear: both;\">\u003Ca href=\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgrfoJB7zN6KcYotYwKf_wh0q67US99zqmynjdEZTtZVf2t5lRTOHTvB4_kqxEduVwr5e3XzzcjRsrA_9t3EtEtoFel7rglN3AnIUsH_txv-hj8LFJxMFlrmyqOphwVyiBC0nsyCbii2FmSZ6s8npYr7civ9VJNwq_AbqRmopJxvbtw4GhtQ1faEfxhzI/s4096/1002228540.jpg\" style=\"display: block; padding: 1em 0; text-align: center; \">\u003Cimg alt=\"\" border=\"0\" width=\"320\" data-original-height=\"2304\" data-original-width=\"4096\" src=\"https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgrfoJB7zN6KcYotYwKf_wh0q67US99zqmynjdEZTtZVf2t5lRTOHTvB4_kqxEduVwr5e3XzzcjRsrA_9t3EtEtoFel7rglN3AnIUsH_txv-hj8LFJxMFlrmyqOphwVyiBC0nsyCbii2FmSZ6s8npYr7civ9VJNwq_AbqRmopJxvbtw4GhtQ1faEfxhzI/s320/1002228540.jpg\"/>\u003C/a>\u003C/div>