வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

சர்வதேச தாய்மொழி நாள் விழா.....



                 ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (21.02.2020) *சர்வதேச தாய்மொழி* நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் உதவி ஆசிரியர்கள் திரு ஜி.எம். சிவக்குமார், திரு வே. இராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் *சர்வதேச தாய்மொழி நாள்* தொடர்பாக சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் ஐக்கிய நாடுகள் அவையால் 1999 பிப்ரவரி 21 ஐ சர்வதேச தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளையும், தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து உலகில் தற்போது உள்ள 6000க்கு மேற்பட்ட மொழிகளில் சுமார் 43% மொழிகள் அழிவை நோக்கி உள்ள தகவலை வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ளும் அதே நேரத்தில், ஒருமொழி அழிந்தால் தொடர்ந்து அம்மொழி பேசும் இனமும் அழியும் என்ற கருத்தை வலியுறுத்தி அனைவரும் தத்தம் தாய்மொழியை காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எட்டாம் வகுப்பு மாணவி ச. இதம் நன்றி கூறினார்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக