புதன், 31 அக்டோபர், 2018

தேசிய ஒற்றுமை நாள் விழா .......




இன்று 31.10.2018 புதன்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாள் விழா வாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவரையும் வரவேற்றார்
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும்  கொண்டாடப்பட்டு வரும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் 142வது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாள் விழா வாக கடைபிடிக்கப்படுவது குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் தாய்நாட்டு ஒற்றுமைக்கும், பாதுகாப்பிற்கும் பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இன்று இந்தியப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் குஜராத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ள உலகின் மிக உயரமான 182 மீட்டர் உயரமான சர்த்தார் வல்லபபாய் பட்டேலின் முழு உருவச் சிலை குறித்தும் விரிவாக குறிப்பிட்டார்.
                இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி த. லதா அனைவருக்கும் நன்றி கூறினார்.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக