ஊத்தங்கரை ஒன்றியம்
,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 15.10.2018 ல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 87வது
பிறந்தநாள் இளைஞர் எழுச்சிநாள் விழாவாகவும், சர்வதேச கை கழுவும் நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர்
திரு
செ.இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும்
வரவேற்றார் .தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அப்துல் கலாம் தொடர்பான பல்வேறு செய்திகளையும்,
அவர் வாழ்வில் இடம் பெற்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகளையும் பட்டியலிட்டுக் காட்டி, மாணவர்கள்
அவரின் வாழ்க்கையை பின்பற்றியும், அவரின் கருத்துக்களை ஏற்றும் செயல்பட வேண்டுமெனக்
கேட்டுக் கொண்டார். மேலும் இன்று உலகில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுவது வயிற்றுப்போக்கு
மூலமே எனவும் அதை தடுக்க அனைவரும் தமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம்
பற்றியும் எடுத்துக் கூறினார்.
பின்னர் மாணவர்கள்
”அப்துல் கலாம்” மற்றும் தூய்மை பாரதம் ஆகிய தலைப்புகளில்
கவிதை, பேச்சு, கட்டுரை ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கினர். தொடர்ந்து
உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, அப்துல்கலாம் குறித்து கருத்துரை வழங்கினர்.
பின்னர் விழாவில்
பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய போட்டிகளில்
கலந்துக் கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி
ஆசிரியர் திருமதி நா.திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக