இன்று 03.10.2018 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரண்டாம் பருவ விலையில்லா பாடநூல்கள் வழங்கும்
விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் அரசால் வழங்கப்படும் விலையில்லா
கல்விப் பொருட்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அனைத்து மாணவர்களும் சிறப்பாக கல்வி
கற்க வேண்டும் என எடுத்துக் கூறினார்.
.
பின்னர் மாணவர்கள் அனைவருக்கும்
இரண்டாம் பருவத்திற்கான விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள், சீருடைகள் பள்ளித் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது.
பாடநூல்கள் பள்ளி திறந்த
முதல் நாளே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக