இன்று 21.09.2018
வெள்ளிக்கிழமை அரசு
ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி ஊற்றங்கரையில் விடுதலை வாசகர்
வட்டம்
சார்பில் கவிதை நூல் வெளியீட்டுவிழா
நடைபெற்றது.
வித்யா மந்திர் கலை
மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் க. அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில்,
முன்னதாக சி.வீரமணி அனைவரையும் வரவேற்றார்.
,
விடுதலை வாசகர்
வட்டத் தலைவர் தணிகை. ஜி. கருணாநிதி,
அரசு
ஆண்கள்
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த. மாதப்பன், மருத்துவர் வெ. தேவராசு ஆகியோர் முன்னிலை வகித்து கருத்துரை
வழங்கினர்.
நூலின் முதல்
பிரதியை முத்தமிழ் இலக்கியப் பேரவை தலைவரும், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி
நிறுவனங்களின் நிறுவனருமான கல்வியாளர் திருமிகு வே .சந்திரசேகரன்
அவர்கள் வெளியிட்டார்,
நூலின் முதல் பிரதியை மத்தூர் மாவட்டக் கல்வி
அலுவலர்: திருமிகு இல. நடராசன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற தமிழார்வலர்கள்,
கல்வியாளர்கள், வணிகப்
பெருமக்கள், பல்வேறு அரசியல் இயக்கத்தினர் நூலினை
பெற்றுக்கொண்டார்கள்.
விழாவில்
கவிஞர் முத்து.செல்வராசன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செ. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கவிஞர் செ.
ஆனந்தன் அவர்களின் “பிக்பாஸ் வீடா இந்தியா” நூலினை
சிங்காரப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் திருமிகு. சி. சிவராமன் அவர்கள் அறிமுகப்படுத்தி
கருத்துரை வழங்கினார்.
கவி.செங்குட்டுவன் அவர்களின் “பட்டினித் தடாகத்துப் பாச மலர்கள்” நூலினை
நற்றமிழ் அருவி நாமக்கல் நாதன் அவர்கள் அறிமுகப்படுத்தி
கருத்துரை வழங்கினார்.
பின்னர்
கவிஞர் .செ.ஆனந்தன், கவி.செங்குட்டுவன் (எ) செ .இராசேந்திரன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
நிகழ்வுகளை பழ.பிரபு அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார்.
இறுதியில் ஆடிட்டர் ந .இராசேந்திரன்
அவர்கள் நன்றியுரை அனைவருக்கும் வழங்கினார்.
மிகவும் மகிழ்ச்சி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்