இன்று 14.11.2018 புதன்கிழமை ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்றம் சார்பில் குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று நாடு முழுமையும் கொண்டாடப்பட்டு வரும் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் குழந்தைகள் நாள் விழாவாக கொண்டாடப்படுவதுகுறித்தும்,
அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாள் கொண்டாடப்படுவதன் அடிப்படை
மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு, சுதந்திர
இந்தியாவில் முதல் பிரதமராக பதவி ஏற்று நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்
ஆற்றிய பணிகள் குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அவரின் வழியில் தமது
வாழ்க்கையை அமைத்துக் கொள்வதோடு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட
வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக
பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினவிழாவை நினைவுபடுத்தும் விதத்தில் பேச்சு.
கவிதை, நடனம் ஆகியவற்றில் தமது திறமைகள வெளிக்காட்டினர்,
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம் சிறப்புரை ஆற்றினார். சாய் அறக்கட்டளை திரு சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி கு. ஆனந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்
அதன் பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவில் அதிக அளவிலான பெற்றோர்கள் கலந்துக் கொண்டு தமது குழந்தைகளின் திறமைகளை பார்த்தும், கேட்டும் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக