வெள்ளி, 14 ஜனவரி, 2011

பள்ளியில் பொங்கல் விழா.

               இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு பங்கேற்றனர். பொங்கல் பாணை பொங்கி வழிந்ததைக் கண்ட மாணவர்கள் “பொங்கலோ பொங்கல்” என மிகுந்த உற்சாகத்தோடு கூக்குரலிட்டது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. கிராமத்து பொங்கல் எவ்வாரு நடைபெறுமோ அதே உற்சாகத்தோடு கொண்டாடப்பட்ட இவ்விழாவில் மாணவர்களுக்கு உரியடித்தல் போட்டியும் நடத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது. இதைக் கண்ணுற்ற கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளியிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைகர் ஆசிரியர் திரு செ இராஜேந்திரன் தலைமையில் உதவி ஆசிரியர்கள் திரு பி. பாண்டுரங்கன், திருமதி சி. தாமரைச்செல்வி, திரு சே.லீலாகிருஷ்ணன், திரு ந.இராஜசூரியன் ஆகியோர் செய்தனர்.









1 கருத்து: