வியாழன், 14 நவம்பர், 2019

குழந்தைகள் நாள் விழா - 2019…..




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று (14.11.2019) *குழந்தைகள் நாள் விழா* நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் தனது உரையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு ஜவகர்லால் நேரு அவர்களது பிறந்த நாள் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது எனவும், அதற்கான காரணம் அவர் குழந்தைகள் மீது கொண்ட அன்பு என்றும், இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரின் தீவிர பங்களிப்பு பற்றியும் விரிவாக கூறினார்.
 பின்னர் மாணவர்கள் கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு ஆகியவற்றில் தமது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றிபெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்ட பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.




































திங்கள், 11 நவம்பர், 2019

கல்வி எழுச்சி நாள்……….


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (11.11.2019) சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாள் கல்வி எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  
பள்ளித் தலைமை ஆசிரியர் தமது சிறப்புரையில் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் கல்விப் பணி, அவர் கொண்டு வந்த கட்டாய கல்விச் சட்டம், அவர் முயற்சியில் துவக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
பள்ளி மாணாவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவரின் பத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்து.
இறுதியில் உதவி ஆசிரியர்  திரு வே. இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.









வெள்ளி, 1 நவம்பர், 2019

தமிழ்நாடு தினக் கொண்டாட்டம்........



           இன்று (01.11.2019) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ .இராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு உருவான வரலாறு மற்றும் அதற்காக பாடுபட்ட மொழிப்போராட்ட தியாகிகள் பற்றியும் விரிவாக விளக்கினார்.....