ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
செவ்வாய், 23 ஏப்ரல், 2024
சர்வதேச புத்தக நாள் விழா மற்றும் 2023-24 கல்வியாண்டு நிறைவு நாள் விழா........
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (23.04.2024) சர்வதேச புத்தக நாள் விழா மற்றும் 2023 - 24 கல்வியாண்டு நிறைவு நாள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து ஆசிரியர்கள் வெ. சண்முகம், மா.யோகலட்சுமி, ச. அனிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதை தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் இன்றைய நாளின் சிறப்பு பற்றியும், சர்வதேச புத்தக நாள் கொண்டாடப்படுவதன் அவசியம் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். இக் கல்வியாண்டில் தமது கல்வியை சிறப்பாக முடித்த மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தொடர்ந்து அடுத்த கல்வி ஆண்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டுமெனவும், த்ற்போது எட்டாம் வகுப்பு முடித்துச் செல்லும் மாணவர்கள் அடுத்து ஒன்பதாம் வகுப்பு சேரும் பள்ளியில் சிறப்பாக கல்வி கற்கவும் தொடர்ந்து கல்லூரிக் கல்வி வரையில் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் தமது பள்ளி அனுபவங்களை வெளிப்படுத்துனர், தொடர்ந்து இக்கல்வி ஆண்டில் 3 முதல் 8 வகுப்புகளில் சிறந்த மாணவர்களாகத் தேர்வு பெற்ற மாணவர்களான க. ரேஷ்மா, அ. ஷாலினி, ப. துவாரகா, செ. குமுதா, ம. பூஜா ஆகியோருக்கு பள்ளித் தலைமை ஆசிரியரால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.. இறுதியில் உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
முன்னதாக இன்று அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் இனிப்புடன் அசைவ உணவு வழங்கப்பட்டது. விழாவில் அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், கலந்துக்கொண்டனர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக