திங்கள், 5 செப்டம்பர், 2022

ஆசிரியர் நாள் விழா மற்றும் வ.உ.சி. பிறந்த நாள் விழா...



           ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2022)
  ஆசிரியர் தினவிழா மற்றும் வ.உ.சி. பிறந்த நாள் விழா நடைபெற்றது.

     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் இன்றைய நிகழ்வின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறி அனைவரையும் வரவேற்றார்.

     தொடர்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் நாளின் முக்கியத்துவம் பற்றியும், இதற்குக் காரணமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து இதே நாளில் பிறந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் ஒப்பற்ற தியாகியுமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றியும், அவர் சிறையில் செக்கிழுத்து துண்பப்பட்டதையும், தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று கப்பல் வாங்கி, வெள்ளை அரசுக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனி நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.

     பின்னர் தான் தலைமை ஆசிரியராகப் பொருப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து தனக்கு உதவியாக இருக்கும் ஆசிரியர்களை சிறப்பித்து மகிழும் நிகழ்வை நினைவு கூர்ந்து, உதவி ஆசிரியர்கள் இருவருக்கும் ஆசிரியர் நாள் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் இந்நாளில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை எடுத்துக் கூறி அனைவருக்கும் நன்ரி கூறினார்.

       பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.































புதன், 24 ஆகஸ்ட், 2022

நூல் வெளியீட்டு விழா....

 


ஊத்தங்கரை கவி செங்குட்டுவன் எழுதிய ”ஐம்பெரும் காப்பியங்கள் வினா- விடை விளக்கம்” எனும் நூல் வெளியீட்டுவிழா ஊத்தங்கரை யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

நூலை திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான அறிவுமதி அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். முதல் பிரதியை கல்லூரி தாளாளர் அருள் அவர்கள் பெற்றுக் கொண்டார். கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணகுமாரி , கவிஞர் இளம்பருதி, சமூக செயற்பாட்டாளர் சத்யமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் நூலாசிரியர் கவி. செங்குட்டுவன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.









திங்கள், 15 ஆகஸ்ட், 2022

75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா....

 


          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2022) நடைபெற்ற ”75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா” பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

          முன்னதாக  பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா குறித்து உரையாடினார். பின்னர் மாணவர்கள் 75வது சுதந்திர நாளை குறிப்பிடும் வகையில் கையில் மூவர்ண கொடியை ஏந்திக்கொண்டு இந்தியா வரைபடம் போல நின்றனர். அதன் மத்தியில் மாணவர்களாலேயே 75 என்ற எண்ணும் காட்டப்பட்டது. இந்நிகழ்வு அனைத்து பெற்றோர்களையும் மாணவர்களையும் மிகவும் கவர்ந்தது.
 
        பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் ச. மஞ்சுநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில், 75 வது இந்திய சுதந்திர நாள் அமுதப் பெருவிழா குறித்து விரிவாகப் பேசி, நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட  தியாகிகளுக்கு வீர வணக்கம் செலத்தி நன்றி தெரிவிக்கவே இது போன்ற விழாக்கள் எனக்கூறி முடித்தார், தொடர்ந்து பேசிய அவர் கொரோணா காலகட்டத்திற்கு பின்னர் பள்ளி திரும்பியுள்ள  மாணவர்களின் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அதை மடை மாற்றம் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். 

      பின்னர் மாணவர்கள் சுதந்திர நாளை சிறப்பிக்கும் வகையில் பேச்சு, கட்டுரை ஓவியம் பாடல், கவிதை போன்ற பலவகைகளில் தமது திறன்களை வெளிப்படுத்துனர். அதைத் தொடர்ந்து மாண்வர்கள் பலவண்ண ஆடை உடுத்தி தேசபக்தி மற்றும் நாட்டுபுறப் பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

             அதைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்


     நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி உள்ளிட்ட பெற்றோர்கள், கோகிலா உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.