ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (24.02.2020) *மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்* கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் *பெண் குழந்தைகள் பாதுகாப்பு* தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களது தன்னம்பிக்கை தொடர்பாகவும் விரிவாக விளக்கியுள்ளார். விழாவில் மாவட்ட பால்வள நிறுவன இயக்குநர் திரு நா. மகிழன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். மண்ணாண்ன்டியூர் சாமிநாதன் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக பாடக்குறிப்பேடுகள் மற்றும் இனிப்பு வழங்கினார். நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் வே. இராஜ்குமார், ஜி.எம். சிவக்குமார், தற்காலிக ஆசிரியர்கள் க. கஜேந்திரி, மு. சுஜி, க. நித்தியா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்...,
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 24 பிப்ரவரி, 2020
வெள்ளி, 21 பிப்ரவரி, 2020
சர்வதேச தாய்மொழி நாள் விழா.....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (21.02.2020) *சர்வதேச தாய்மொழி*
நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர்
திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் உதவி ஆசிரியர்கள்
திரு ஜி.எம். சிவக்குமார், திரு வே. இராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர். பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள்
*சர்வதேச தாய்மொழி நாள்* தொடர்பாக
சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் ஐக்கிய நாடுகள் அவையால் 1999 பிப்ரவரி 21 ஐ
சர்வதேச தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளையும்,
தாய்மொழியை பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து உலகில் தற்போது உள்ள 6000க்கு மேற்பட்ட மொழிகளில் சுமார் 43%
மொழிகள் அழிவை நோக்கி உள்ள தகவலை வருத்தத்தோடு பகிர்ந்து கொள்ளும் அதே
நேரத்தில், ஒருமொழி அழிந்தால் தொடர்ந்து அம்மொழி பேசும் இனமும் அழியும்
என்ற கருத்தை வலியுறுத்தி அனைவரும் தத்தம் தாய்மொழியை காக்க வேண்டும் எனக்
கேட்டுக்கொண்டார். எட்டாம் வகுப்பு மாணவி ச. இதம் நன்றி கூறினார்.
வியாழன், 30 ஜனவரி, 2020
மகாத்மா காந்தி நினைவு நாள் முன்னிட்டு தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி...
**
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று * காந்தி நினைவு நாள்* முன்னிட்டு *தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழி.* பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி உதவி ஆசிரியர்கள் மு.இலட்சுமி, வே.இராஜ்குமார், ஜி.எம்.சிவக்குமார், கா.நித்யா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)