செவ்வாய், 6 டிசம்பர், 2022

பள்ளி கலைத் திருவிழா - 2022…..


ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று (28.11.20202) * பள்ளி கலைத் திருவிழா* நடைபெற்றது.

முன்னதாக பள்ளி வளாகத்தில் காலை தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் ஏற்றி வைத்தார், பின்னர் நடைபெற்ற விழாவிற்கு கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திரு வெ. சண்முகம் அனைவரையும் வரவேற்றார். அடுத்து பேசிய ஊராட்சி மன்றத் தலைவர் தனது உரையில் கல்நிகழ்வுகளி மாணவர்கள் பங்கு பெறுவதால் ஏற்படும் சமூக, பொருளாதார, வாழ்க்கை மாற்றங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.  

தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் விழாவிற்கு வந்துள்ள வட்டாரக் கல்வி அளுவலர்கள், சிற்றூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொது மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரவேற்பும் வாழ்த்துகளையும் தெரிவித்ததோடு, இன்றைய இவ்விழாவின் முக்கியத்துவம் மற்றும் இக்கலைவிஅழப்போட்டிகளில் வெற்றி பெறுபவர் மாநில அளவிலான போட்டிகள் வரை சென்று கலந்துக்கொண்டு முதல்வரின் விருதுகள் பெற முடியும் என்றும் கூறி, இப்பள்ளியின் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்  

    விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் திரு ச. லோகேஷா, திரு க. இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கினர்..

 பின்னர் மாணவர்கள் கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தமது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி ஜெ.நாச்சி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி, தற்காலிக ஆசிரியர்கள் மா. யோகலட்சுமி, க. அனிதா உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்.

நிகழ்வை பள்ளி உதவி ஆசிரியர் திரு ச. மஞ்சுநாதன் தொகுத்து வழங்கினார்.

இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.



























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக