ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (14.11.2022) *குழந்தைகள் நாள் சிறப்பு உறுதி மொழி* ஏற்கப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள், பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாணவர்களின் வழக்கமான செயல்பாடுகளான (தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, நலமுடன் வாழ 10 கட்டளைகள், திருக்குறள் விளக்கத்துடன், பொதுஅறிவு வினா - விடை, ஆங்கில பழமொழி தமிழ் பொருளுடன், செய்தித்தாள் வாசித்தல்) ஆகியன முடிந்த பின்னர் தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நாள் விழாவில் மாணவர்களுக்கு பேச்சு, ஓவியம், பாடல், கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி ஆகியோரும் பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டு குச்சி மிட்டாய் (லாலிபாப்) வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக்கொண்ட அனைத்து மாணவர்களும் மிகுந்த மகிழ்வை வெளிப்படுத்தினர்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக