திங்கள், 27 ஜனவரி, 2020

இந்திய குடியரசு நாள் விழா - 2020…..




ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று (26.01.2020) *இந்திய திருநாட்டின் 71வது குடியரசு நாள் விழா* நடைபெற்றது.
முன்னதாக பள்ளி வளாகத்தில் காலை தேசியக் கொடியை  ஏற்றி வைத்தும், பின்னர் நடைபெற்ற விழாவிற்கு தலைமை தாங்கினார் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன் அவர்கள், தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது அவர் விழாவிற்கு வந்துள்ள சிற்றூராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரவேற்பு தெரிவிப்பதோடு, இப்பள்ளியின் பல்வேறு சிறப்புச் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.  பின்னர் பேசிய தலைவர்  தனது உரையில் சுதந்திர இந்தியாவின் இந்திய சுதந்திர போராட்டம் பற்றியும், குடியரசு ஆனதுபற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.  
            விழாவில் ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு ப. சிவப்பிரகாசம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டு சிறப்புரை வழங்கினார். மேலும் கெங்கபிராம்பட்டி சிற்றூராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு விஜயகுமாரி பிரகாஷ், திரு, தேவராஜ், திருமதி கோவிந்தம்மாள் சுரேஷ்  ஆகியோரும், பள்ளி பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் திருமதி மகாலட்சுமி, துணைத்தலைவர் அம்பிகா, சாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 பின்னர் மாணவர்கள் கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு மற்றும் குடியரசு நாள் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தமது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றிபெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் முன்னால் கிராமக் கல்விக் குழுத் தலைவர் பூபதி, கதிர்வேல், சாந்தி, சுதா, உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு. இலட்சுமி, திரு வே. இராஜ்குமார், திரு ஜி.எம்.சிவக்குமார், தற்காலிக ஆசிரியர் திருமதி கா. நித்யா உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்ட பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார்.














































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக