தமிழ்நாடு டிஜிடல் டீம் மற்றும் ஆசிரியர்.காம் இணைந்து ஆர்.எம்.என் மகால்,
சிங்கபெருமாள் கோயில், சென்னையில் நடத்திய விழாவில் தமிழகத்தின் பல்வேறு
பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஒளிரும் ஆசிரியர் விருது
வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், சிறந்த தகவல் தொழிற்நுட்பக் கல்வி, கணினிப் பயன்பாடு மற்றும் சமூக சேவை அளித்து மாணவர்ளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய ”ஒளிரும் ஆசிரியர்” எனும் சிறப்பு விருது தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குநர் திரு கே. குணசேகரன் அவர்களால் வழங்கப்பட்டது.
இவ்விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகிய என்னையும், அவர்கள் தேர்வு விருது வழங்கினர். விருது வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், இவ்விருது பெற காரணிகளாக அமைந்த எமது பள்ளி மாணவர்களுக்கு நன்றியை கூறிடும் முகத்தான், எனக்கு வழங்கப்பட்ட ” ஒளிரும் ஆசிரியர்” விருதை எமது பள்ளி மாணவர்களுக்கு இன்று அர்ப்பணித்து மகிழ்ந்தேன். அதன் வெளிப்பாடாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எழுதுகோள்கள்(பேனா) மற்றும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக