ஊத்தங்கரை ஒன்றியம் அனைத்து நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS) சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 24.10.2018 முதல் தொடர்ந்து ஊத்தங்ரை துவக்கப் பள்ளியில் நடத்தப்பட்டு வந்தது.
இதில் ஒன்றியத்தில் உள்ள 17 பள்ளிகளில் இருந்து 115 மாணவர்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொண்டனர். பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளராக ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களும், பயிற்சியாளர்களாக ஊ.ரெட்டிப்பட்டி கணித பட்டதாரி ஆசிரியர் திரு வெ. ஸ்ரீதர், வெப்பாலம்பட்டி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு இரா. சசிகுமார், கொண்டம்பட்டி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இரா. அருண்குமார், கெங்கபிராம்பட்டி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு வீரபத்திரன் மற்றும் துரிஞ்சிப்பட்டி தலைமை ஆசிரியர் திருமதி கா.க. சாந்தி ஆகியோர் செயல்பட்டனர்.
இப்பயிற்சி முகாமின் நிறைவு விழா வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி கோ. மாதேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பயிற்சியாளர் இரா. சசிகுமார் அனைவரையும் வரவேற்றார். பின்னர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் திரு செ. இராஜேந்திரன் பயிற்சி முகாமின் அன்றாட செயல்பாடுகள், மாணவர்களின் பங்கேற்பு மற்றும் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகியன பற்றியும் இப்பயிற்சி முகாமிற்கு உதவியவர்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.
தொடந்து நிகழ்வில் பங்கேற்ற ஊ.ரெட்டிப்பட்டி தலைமை ஆசிரியர் திரு மா. கிருஷ்ணமூர்த்தி, பாம்பாறு அணை தலைமை ஆசிரியர் திரு மு. மோகன்குமார், ஒட்டம்பட்டி தலைமை ஆசிரியர் திரு மாம்.கி. ஞானசேகரன், கீழ்குப்பம் தலைமை ஆசிரியர் திரு. க. செல்வராஜ், கொட்டுகாரம்பட்டி ஆசிரியர் திரு சே. லீலாகிருஷ்ணன், வன்னியர் நகர் ஆசிரியர் திரு மா. செந்தில்குமார், முசிலிக்கொட்டாய் ஆசிரியர் வெ. இராஜ்குமார், கதவணி தலைமை ஆசிரியர் திருமதி நா. ஜோதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பயிற்சியாளர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களின் கருத்துரைகளுக்குப் பின் பயிற்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பயிற்சியாளர் வெ. ஸ்ரீதர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக