எமது பள்ளியில் ( ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர், ஊத்தங்கரை
ஒன்றியம் ) இன்று (11.01.2109) பொங்கல் விழா மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது.
முன்னதாக பள்ளி மாணவர்களின் பங்கேற்போடு
துவங்கிய இவ்விழா ஆசிரியர்களின் மேற்பார்வையில்
மிகச்சிறப்பாக கிராமத்து திருவிழாவாகவும்,
இயற்கையைப் போற்றும் விழாவான சூரியனை வழிபடும்
விழாவாகவும் துவங்கியது. விழாவில் மாணவர்கள் மிகவும் மகிழ்வோடும், ஆர்வத்தோடும்
பங்கேற்றனர். அப்போது செங்கரும்பு, மஞ்சள்,
பூசணி ஆகியவற்றையும், பல வண்ண பலூன்களையும்
மாணவர்களே கொண்டுவந்து பூசையில் வைத்தும் புதுப் பானையில் பொங்கல்
வைக்கும் நிகழ்வில் பங்கேற்றும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாரம்பரிய
ஆடைகளான பாவாடை – சட்டை, வேட்டி – சட்டை மற்றும் புடவை – ஜாக்கட் ஆகியவற்றில்
வந்து நிகழ்வில் பங்கேற்றது அனைவரையும் மகிழச் செய்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்
திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் உதவி ஆசிரியர்கள் மு.
இலட்சுமி, த. லதா, ந. திலகா ஆகியோர்
செய்திருந்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட்டாரக்
கல்வி அலுவலர்கள் திருமதி கோ. மாதேஸ்வரி, திரு என்.ஏ.பி. நாசர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்
கு. ஆனந்தி, தற்காலிக ஆசிரியர் அ. பவித்ரா,
சத்துணவு அமைப்பாளர் பீமன் மற்றும் பெற்றோர்களும் பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு கோலப் போட்டி மற்ரும் விளையாட்டுப்
போட்டிகள் வைத்து பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக