ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள்
விழா “குழந்தைகள் நாள் விழா” வாக
மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர்
பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட
சிறந்த தலைவரும், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை அமைச்சராகப் பொருப்பேற்றவருமான
திரு ஜவகர்லால் நேரு அவர்கள்
இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு மிகப்பெரும் பணிகளை ஆற்றியவர், மேலும் குழந்தைகள்
மீது அளவிடா பாசமும் பற்றும் கொண்டு திகழ்ந்தவர் எனவும், அதன் காரணமாகவே அவரின் தன்னலமற்ற
சேவையைக் கருத்தில் கொண்டும், குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பினை போற்றும் வகையிலும்
அவரின் பிறந்த நாளை குழந்தைகள் நாள் விழாவாக
நாடு முழுமையும் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார் கூறினார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள் ஜவகர்லால் அவர்கள் குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும்
உரையாற்றினர், அடுத்து கவிதைகள், பாடல்கள் மூலமும் அவரின் சிறப்புகளை வெளிப்படுத்தினர்.
பின்னர் குழந்தைகள் நாள் சிறப்பு கட்டுரை, கவிதை, பேச்சு, பாடல் போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே.
வஜ்ஜிரவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, நா. திலகா ஆகியோர் செய்திருந்தனர்.
வாழ்த்துகள் சார்
பதிலளிநீக்கு