வெள்ளி, 13 நவம்பர், 2015

கல்வி உரிமைநாள் விழா.....



ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் விழா “கல்வி உரிமை நாள் விழா” வாக மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி த.லதா அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொருப்பேற்ற திரு அபுல்கலாம் ஆசாத் அவர்கள்  இந்திய கல்வி முறையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தவர் என்றும் அனைவரும் உயர்கல்வி கற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் பல்வேறு பல்கலைக் கழகங்களை தோற்றுவித்தார் எனவும், அதன் காரணமாகவே அவரின் தன்னலமற்ற சேவையைக் கருத்தில் கொண்டு அவரின் பிறந்த நாளை கல்வி உரிமை நாளாக நாடு முழுமையும் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார் கூறினார்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி மு.இலட்சுமி, திரு வே. வஜ்ஜிரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக