ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
ஞாயிறு, 29 நவம்பர், 2015
ஞாயிறு, 22 நவம்பர், 2015
புதிய தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு….
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளி அருகில் நூற்றாண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில், உலக பாரம்பரிய வாரவிழா தொடர்பாக
தனது தேடுதல் பணியை மேற்கொண்ட போது பள்ளியில்
இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் புதரில் மறைந்து இருந்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கல்வெட்டு சுமார் 3 அடி உயரமும் 1½ அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் பொறிக்கப்பட்ட தமிழ்க்
எழுத்துக்களை முழுமையாக படிக்க இயலவில்லை, ஒருசில சொற்கள் மட்டுமே படித்து புரிந்துக்கொள்ள
இயலுகிறது.
இக்கல்வெட்டு அமைந்துள்ள இடத்தை ஆய்வு செய்தபோது, கல்வெட்டு அமைந்துள்ள சுமார் செண்ட் நிலம் உடையது எனவும், இது சுமார் இரண்டு
கி.மீ தொலைவில் உள்ள பெருமாளப்பன் கோயிலுக்கு சொந்தமானது எனவும் அறிய முடிகிறது. மேலும்
கல்வெட்டில் பொறிக்கப்பட்ட செய்திகளை படித்து அறிந்த வகையில் பெருமாளப்பன் கோயிலுக்கு
நிலத்தை கொல்ல நாய்க்கனூரைச் சேர்ந்த நாயக்கர் ஒருவர் தானமாக வழங்கி, அது தொடர்பாக
அவர் எழுதிய கல்வெட்டு இது எனவும் மட்டுமே அறிய முடிகிறது, மேலும் இதில் காணும் எழுத்து
வடிவமைப்பு அடிப்படையில் ஆய்வு செய்யும்போது இக் கல்வெட்டு நூற்றாண்டுகள் பழமையானதாக
இருக்கலாம் எனவும் அறிய முடிகிறது.
கல்வெட்டு ஆய்வாளர்கள் வந்து நேரில்
ஆய்வு மேற்கொண்டால் இக்கல்வெட்டு குறித்தும், இப்பகுதியின் வரலாறு குறித்தும் கூடுதல்
தகவல்களை அறிய இயலும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)