சனி, 28 ஜூலை, 2012

பள்ளியில் முப்பெரும் விழா


                   ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இளைஞர் செஞ்சிலுவச் சங்கம் (JUNIOR RED CROSS) துவக்க விழா, தமிழ் இலக்கிய மன்றத் துவக்க விழா, மாணவர்களுக்கு இலவச பாடக்குறிப்பேடுகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.

 விழாவிற்கு பள்ளியின் கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு டி. பூபதி தலைமை தாங்கினார். பள்ளியின் ப்-எற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி வி. பத்மா முன்னிலை வகித்தார்.  முன்னதாகப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அப்போது மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வரும் பொருட்டு பள்ளியில் பல்வேறு செயல்பாடுகள் புதிதாக துவக்கப்பட உள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைய விழா எனவும், மாணவர்களுக்கு இளம் வயதிலேயே சேவை மனப்பான்மையையும், இயற்கையை நேசிக்கும் உணர்வையும் ஊட்டிடவே இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன எனவும் கூறினார்.

பின்னர் பள்ளி மாணவர்கள் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் கவிதைகளையும், கட்டுரைகளையும் வழங்கினர். விழாவில் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு சி. சிவராமன், ஆசிரியப் பயிற்றுநர் திரு பூ. நந்தகுமார், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்டப் பொருளாளர் திரு மு. பன்னீர்செல்வம், வட்டார இணை கன்வீனர் திரு இரா. சத்தியமூர்த்தி, ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளி  இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஆலோசகரும் மாணவர்களுக்கு இலவச பாடக் குறிப்பேடுகள் வழங்கியவருமான திரு கு. கணேசன் ஆகியோர் விழாவில் கலந்துக்கொண்டு வாழ்த்துரையும் கருத்துரைகளும் வழங்கினர். பின்னர் சிறப்பு விருந்தினரும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கன்வீனருமான திரு சி. செங்குட்டுவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் அதிகமான அளவில் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திருமதி சு. சாரதா, திருமதி மு. இலட்சுமி, திருவே.வஜ்ரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.





























 

ஞாயிறு, 22 ஜூலை, 2012

முப்பெரும் விழா அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்,
                           எமது பள்ளியில் வரும் 25.07.2012-ல் நடைபெற உள்ள முப்பெரும் விழாவிற்கு அனைவரும் வருக, உமது வாழ்த்துக்களைத் தருக.

ஞாயிறு, 17 ஜூன், 2012

பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்


எமது பள்ளியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அதன் தலைவர் திருமதி வி. பத்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத்தலைவர் திரு டி.பூபதி முன்னிலை வகித்தார்.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.செ.இராஜேந்திரன் அவர்கள் தற்போதைய பள்ளியின் நிலை பற்றியும், இனி வருங்காலங்களில் இப்பள்ளியில் செயல்படுத்த உள்ள ஆண்டுச் செயல்திட்டம் பற்றியும் மிக விரிவாக எடுத்துக்கூறி நமது கிராமத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் எவரும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்காக அனைத்து பெற்றோர்களும் பொது மக்களும் பள்ளி ஆசிரியர்களோடு இணைந்து கிராமத்தில் உள்ள பள்ளி செல்லாத அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்திட உரிய முயற்சியும், ஒத்துழைப்பும் அளித்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.    
அதன் அடிப்படையில் பள்ளியில் இவ்வாண்டு மேற்கொள்ள உள்ள கீழ்க்கண்ட ஆண்டுச் செயல்திட்டம் சிறப்பாக செயல்படுத்திட முழு ஒத்துழைப்பை அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1. கிராமத்தில் உள்ள பள்ளி வயதுக் குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்ந்து தொடந்து படித்திட முழு முயற்சி மேற்கொள்ளுதல்.
தீர்மானம் : 2. பள்ளி மாணவர்களின் சேவை மனப்பான்மையை வளர்த்திடும் பொருட்டு பள்ளியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் துவக்கி அதன் மூலம் சேவை உணர்வை ஊட்டுதல்.
தீர்மானம் : 3. பள்ளி மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், பாதுகாக்கவும் ஊக்குவிக்கும் வகையிலும், புவி வெப்பமாதலை தடுத்திடும் முயற்சியில் அவர்களை ஈடுபடுத்திடும் வகையிலும் பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றம் துவக்கி செயல்படுத்துதல்.
தீர்மானம் : 4. மாணவர்களின் கற்றல் திறமைகளையும், வெளிப்பாட்டுத் திறமைகளையும் மேம்படுத்தும் வகையிலும், பாட இணைச் செயல்பாடுகளில் ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில மொழி மன்றம், அறிவியல் மன்றம், கணித மன்றம் ஆகியவற்றைத் துவக்குவதெனவும் அதற்கு சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் முழு பொருப்பேற்று ஒவ்வோர் மன்றம் சார்பிலும் தலா ஓர் நிகழ்வு மாதம்தோறும் வழங்கிடல்.
தீர்மானம் :  5. மாணவர்களின் பன்முக ஆளுமைத் திறனை மேம்படுத்தும் பொருட்டு பள்ளியில் குழந்தைகள் பாராளுமன்றம் துவக்கி அதன் மூலம் குழந்தைகளுக்கு குடிமைப் பயிற்சி உள்ளிட்டவைகளை திறம்பட அளித்தல்.
தீர்மானம் :  6. மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒழுங்கு தன்சுத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் கழுத்தணி (tie) இடுப்பணி (belt) அடையாள வில்லை (batch) புகைப்பட அடையாள அட்டை (photo ID card) ஆகியவற்றை வழங்குதல்.  
தீர்மானம் : 7. மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்திடவும், புத்தக வாசிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் தினமும் பிற்பகல் 1.30 முதல் 2.00 மணி வரையில் நூலக வகுப்பு கட்டாய வகுப்பாக நடத்துதல்.
தீர்மானம் : 8. மாணவர்களின் உடல் நலம், மன நலம் ஆகியவற்றை மேம்படுத்திட வேண்டி வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் யோகா மற்றும் கூட்டு உடற்பயிற்சி வகுப்பு நடத்துதல்.
இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெற்றோர்கள் அனைவரும் பள்ளிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி கூறினர்.
பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திரு ப. சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.  






வெள்ளி, 1 ஜூன், 2012

10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

அன்பு நண்பர்களே
                    எதிர்வரும் 04.06.2012 அன்று வெளிவர உள்ள 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நீங்கள் விறைந்து காண வேண்டுமா? வாருங்கள் எமது தளத்திற்கு.......

முகவரி : www.kalvikoyil.blogspot.in

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வாசிப்புத் திறன் ஆய்வு
 எமது பள்ளியில் 19.04.2012 ல் மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்றும் பள்ளியின் புறச் சூழல் குறித்த ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட  கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமதி ஜி.விருதசாரணி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. 
            அப்போது அவர் தமது பார்வையின் போது 5 மற்றும் 8 ஆம் வகுப்பு  மாணவர்களின் தமிழ் ,மற்றும் ஆங்கில வாசிப்புத் திறனை   சோதித்தார். இறுதியில் மாணவர்களின் வாசிப்புத் திறன் மற்ரும் பள்ளிச் சூழல் குறித்து திருப்தி தெரிவித்துச் சென்றார்.

தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்
               ஊத்தங்கரை ஒன்றிய அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஊத்தங்கரை துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி கே.பி.மகேஸ்வரி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புக் கருத்துரை வழங்கினார்கள். அப்போது அவர் தமது கருத்துரையில் ஆசிரியர்கள் பணியில் எவ்விதக் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டாமல் இயல்பாகவும் எதார்த்தமாகவும் தமது கருத்துக்களை வெளிபடுத்தியமை அனைவரையும் கவர்ந்தது.
              மாவட்ட அலுவலர் ஒருவர் இதுபோல் அவ்வப்போது தமது கீழ்நிலை
அலுவலர்களைச் சந்தித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டால் அனைவருமே தத்தமது பணியில் சிறப்புடன் செயல்பட ஊக்கம் அளிப்பதாய் அமையும்.           







வெள்ளி, 16 மார்ச், 2012

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் துவக்க விழா.


ஊத்தங்கரை ஒன்றியம் கெங்கபிராம்பட்டி குறு வள மையத்தில் இன்று பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான 3 நாள் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் துவங்கியது.
            மைய  ஒருங்கிணைப்பாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக மைய பொருப்பு ஆசிரி்யப் பயிற்றுநர் திரு க. சண்முகம் அனைவரையும் வரவேற்றார். விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு ச.வரதராஜன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்டார். மேலும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு கொ.மா. சீனிவாசன், ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு கோட்டீஸ்வரன், ஆசிரியப் பயிற்றுநர் திரு பாக்கியராஜ் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

        3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சி முகாமில் கெங்கபிராம்பட்டி, ஜோதிநகர், கொண்டம்பட்டி, நாப்பிராம்பட்டி, ஆகிய நடுநிலைப் பள்ளிகள், உப்பாரப்பட்டி உயர்நிலைப் பள்ளி, மண்ணாண்டியூர், தாண்டியப்பனூர், அப்பிநாயக்கன்பட்டி, பேயனூர், சின்னக் குன்னத்தூர், உப்பாரப்பட்டி,சந்தக்கொட்டாவூர் துவக்கப் பள்ளிகள் என 12 பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

                                      இப் பயிற்சி முகாமில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதைச் செயற்படுத்துவதில் பெற்றோரின் பங்கு, பள்ளி மேலாண்மைக் குழுவின் பணிகள் , குழந்தைகளின் உரிமைகள் போன்ற பல்வேறு கருத்துக்கள் பற்றி கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
             ஒவ்வோர் நிகழ்வின் போதும் பள்ளி மாணவர்களின் திறன் வெளிபாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது  இதைக் கண்ணுற்ற பெற்றோர்களும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் பெரு மகிழ்வு கொண்டனர்.
         இறுதியில் மைய உதவி ஒருங்கிணைப்பாளர் திரு பி. சிவன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.