வெள்ளி, 13 நவம்பர், 2015

ஒன்றிய அளவிலான வினாடி - வினா போட்டியில் சிறப்பிடம்.....

           தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஒன்றிய அளவிலான வினாடி-வினா போட்டி ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சேர்ந்த உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு ஓர் குழுவாகப் பங்கேற்றனர். அதில் எமது பள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் பூ. தமிழரசன், ஏழாம் வகுப்பு மாணவர் பூ. தனுஷ், ஆறாம் வகுப்பு மாணவி கு. ஜனனி ஆகியோர் கலந்துக்கொண்டு மூன்றாம் இடம் பெற்று சிறப்புச் சான்றிதழ் பெற்று வந்தனர். அவர்களுக்கு  எமது பள்ளி  இறைவணக்கக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக