திங்கள், 9 மார்ச், 2020

பட்டமளிப்பு விழா – 2020



          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (07.03.2019) எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


             விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.


             பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ .இராஜேந்திரன் அவர்கள் பட்டமளிப்பு விழா தொடர்பாகவும் அதன் அவசியம் குறித்தும் பல்வேறு கருத்துக்களைக் கூறி நாளைய மகளிர் தினவிழா குறித்தும் அது கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்கூறி இன்றைய நிகழ்வில் பெண்குழந்தைகள் மட்டுமே பங்கேற்கச் செய்துள்ளதன் காரணம் பற்றியும் விளக்கினார்.மேலும் பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எனக் கூறியதோடு அரசுப் பள்ளியில் அனைவரும் கற்க வேண்டும் எனக் கேட்டுகொண்டு அடுத்த கல்வி ஆண்டில் அதிக அளவிலான குழந்தைகள் நமது பள்ளியில் புதிதாக சேர்க்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.


      நிகழ்வில் கெங்கபிராம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திரு தி. வெங்கடேசன், வட்டாரக் கல்வி அலுவலர் திரு என்.ஏ.பி. நாசர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு ப. சிவப்பிரகாசம், ஆகியோரும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருமதி இரா. மகாலட்சுமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி கு. ஆனந்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


            பின்னர் ஊத்தங்கரை அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் திருமதி எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் அவர்கள் .மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கிராமப்புற முன்னேற்றம் குறித்தும், அதற்கான கல்வி வாய்ப்புகள் குறித்தும் விரிவாகப் பேசி அனைவரும் சிறந்த மற்றும் தொடர்ந்து கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்

       தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கவிதை, பேச்சு, ஓவியம் என்ற வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் பள்ளிக் குழந்தைகளின் கண்கவர் வண்ண கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


       அடுத்து நிகழ்வில் பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது . அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


           விழாவில் தற்காலிக ஆசிரியர்கள் க. நித்யா, மு. சுஜி, கஜேந்திரி ஆகியோரும் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.

         இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு ஜி.எம். சிவக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.




































வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

தேசிய அறிவியல் தினம் - 2020....

          ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (28.02.2020) தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

                முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் விழாவிற்கு தலைமை தாங்கினார். அவர் தமது தலைமை உரையில் இன்றைய நாளின் சிறப்பு பற்றியும், அதன் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி, இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் அவர்களது வாழ்க்கை வரலாறு பற்றியும் விளக்கினார். 

          மாணவர்கள் தாம் படைத்த அறிவியல் செயல்திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். இறுதியாக பள்ளி உதவி ஆசிரியர் திரு ஜி.எம்.சிவக்குமார் அனைவரும் நன்றி கூறினார். நிகழ்வில் தற்காலிக ஆசிரியர்கள் சுஜி, கஜேந்திரி, நித்தியா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.