வெள்ளி, 15 ஜூலை, 2016

கல்வி வளர்ச்சிநாள் விழா - 2016


இன்று 15.05.2016ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சிநாள் விழா வாக  கொண்டாடப்பட்டது.
     பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று தமிழகம் முழுவதும் மக்களின் கொண்டாடப்படும் கல்வி வளர்ச்சிநாள் விழா பற்றி எடுத்துக் கூறியதோடு, காமராசரின் பிறந்தநாள் விழாவை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் காமராசர் கல்வி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள்  கல்வி வளர்ச்சிநாள் தொடர்பாக,  காமராசரைப் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கவிதை மற்றும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினர்.
பின்னர்  கட்டுரை, கவிதை, பாடல், பேச்சு,  ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்ட்து.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி . லதா, . திலகா, ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே. வஜ்ஜிரவேல்  நன்றி கூறினார்

 










































திங்கள், 11 ஜூலை, 2016

உலக மக்கள்தொகை தினவிழா - 2016


ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,  பள்ளி சுற்றுச்சூழல் சார்பில்  இன்று 11.07.2016ல் உலக மக்கள்தொகை தினவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.  விழாவில் தலைமையேற்று பேசிய பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் உலக மக்கள் தொகை தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் பற்றியும், உலகில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கூறி, அதற்கான தீர்வு மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதே  எனவும் கூறினார்.
தொடர்ந்து மாணவர்கள் மக்கள் தொகை விழிப்புணர்வு தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதைகளை படைத்தனர்.
பின்னர் மாணவர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்திய வரைபடம் போல நின்று மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் வெளிப்படுத்தினர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல். திருமதி த. லதா ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.














ஞாயிறு, 10 ஜூலை, 2016

எமது பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும்......

 பள்ளித் தலைமை ஆசிரியர்
 ஆங்கில வழி கற்கும் மாணவர்களும் ஆசிரியர்களும்
பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும்

வெள்ளி, 1 ஜூலை, 2016

எமது பள்ளியில் இன்று.......

 
               எமது பள்ளியில் கடந்த 29.06.2016 அன்று 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கழுத்தணி (டை), இடுப்பணி (பெல்ட்), அடையாள வில்லை (பேட்ச்) ஆகியனவும், 1 முதல் 3 வகுப்புகள் வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வேறுபட்ட வண்ணச் சீருடைகளும் வழங்கப்பட்டது. அதை முதல் முறையாக இன்று அணிந்து வந்து கம்பீரமாக காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். 
           அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய தலைமை ஆசிரியர் தனியார் பள்ளிக்கு இணையான சீருடைகளை இன்று அணிந்துள்ள நாம் அவர்களுக்கு நிகராக அல்ல, அவர்களுக்கு மேலாக சிறப்பான கல்வியை கற்று வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுகொண்டார்.