ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில், பள்ளி சுற்றுச்சூழல் சார்பில் இன்று 11.07.2016ல் உலக மக்கள்தொகை தினவிழா மிகச்சிறப்பாக
நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி
அனைவரையும் வரவேற்றார். விழாவில் தலைமையேற்று
பேசிய பள்ளித்தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் உலக மக்கள் தொகை தினவிழா
கொண்டாடப்படுவதன் அவசியம் பற்றியும், உலகில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள
பிரச்சனைகள் மற்றும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கூறி, அதற்கான தீர்வு மக்கள் தொகையை
கட்டுப்படுத்துவதே எனவும் கூறினார்.
தொடர்ந்து மாணவர்கள் மக்கள் தொகை விழிப்புணர்வு
தொடர்பான பேச்சு, கட்டுரை, கவிதைகளை படைத்தனர்.
பின்னர் மாணவர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில்
இந்திய வரைபடம் போல நின்று மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வை அனைவருக்கும் வெளிப்படுத்தினர்.
விழாவில் உதவி ஆசிரியர்கள் திரு வே. வஜ்ஜிரவேல்.
திருமதி த. லதா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக