இன்று
27.07.2016 – ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள்
கடைபிடிக்கப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் தனது தலைமை உரையில் இன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் அ.பெ.ஜை.அப்துல் கலாம் நினைவு நாள் பற்றி எடுத்துக் கூறி அவரின் புதுமை மற்றும் புரட்சிகரமான விழிப்புணர்வுக் கருத்துக்கள் பற்றியும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் கூறிச் சென்றுள்ள கருத்துக்கள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி நாம் அவற்றை முழுமையாக பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் விளக்கினார்.
அடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல் கலாம் நிழற்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக