ஞாயிறு, 11 ஜூலை, 2010

உலகத் தமிழ் செம்மொழித் மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர்.

          தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர்  

தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பு பெற்றார்.
                  கோவையில் சூன் 23 முதல் 27 வரையில் நடைபெற்ற மாநாட்டில் பள்ளித் தலைமையாசிரியர் நோக்காளராகக் கலந்துக் கொள்ள தமிழ் இணைய மாநாட்டு அமைபாளர்களால் அழைக்கப்பட்டார். அதன் அடிப்படையில் 23 - ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுத் தொடக்க விழா மற்றும் 24 - ல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டு தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்வுகளிலும் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து கருத்தரங்க நிகழ்வுகளிலும் பங்கு பெற்றார்.
 
               தமிழ்க் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
       தமிழ் மரபு அறக்கட்டளை திருமதி சுபாஷினி மற்றும் சென்னை பல்கலைக் கழக முன்னைத் துணைவேந்தர் திரு பொற்கோ அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
 நாசா அறிவியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளரும் தமிழ் மொழி ஆய்வறிஞருமான திரு நா.கண்ணன் அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்.
             நாசா அறிவியலாளர் திரு நா.கண்ணன், ஆஸ்திரேலியாவில் வாழும் சிங்கை கணிப்பொறியியலாளர் திரு பாலாப் பிள்ளை அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
முதுபெரும் தமிழ் ஆய்வாளர் இலங்கை திரு கா.சிவத்தம்பி அவர்களுடன் பள்ளித் தலைமையாசிரியர்
                              அறிவியல் அறிஞர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்



சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பள்ளித் தலைமையாசிரியர்.

மூன்றம்பட்டி கிராம ஊராட்சி மன்ற சிறப்புக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதில் பள்ளித் தலைமையாசிரியர் கலந்துக்கொண்டு பள்ளிகுத் தேவையான கூடுதல் வசதிகள் மற்றும் ஒரு பக்கச் சுற்றுச்சுவர் தேவை பற்றி வேண்டுகோள் விடுத்தார்.
              அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்.


ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி கொட்டுகாரம்பட்டியில் 2010 - 11 கல்வி ஆண்டுக்கான முதல் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 18.06.2010 - ல் நடைபெற்றது.
                 கூட்டத்திற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம் அவர்கள் தலைமை தாங்கினார். கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான திருமதி நா.இராதா நாகராஜ் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள அனைவரையும் வரவேற்றார் அப்போது அவர் தனது வரவேற்புரையில் பள்ளியின் தற்போதைய நிலைமை மற்றும் இவ்வாண்டுக்கான புதிய செயல் திட்டங்கள், பள்ளி மற்றும் மாணவர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
                 பின்னர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், கிராமக் கல்விக் குழுத் தலைவர், பெற்றொர்கள் உள்ளிட்டோரின் கருத்துரைகளுக்குப் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
        (1)               ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் இக்குழு பாராட்டுகிறது.
      (2)                இப்பள்ளியின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்குதல்.
      (3)               பள்ளி மாணவர்களுக்கு இவ்வாண்டு பெல்ட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல்.
                  கூட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் நா.இராஜசூரியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.




2010-11 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கொட்டுகாரம்பட்டியில் 2010 - 11 கல்வி ஆண்டுக்கான  மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி 09.06.2010 -ல் நடைபெற்றது. பேரணிக்கு  ஒன்றிய வள மைய மேற்பார்வையாளர் திரு அ.வீ. விஜயகுமாரன் அவர்கள் தலைமை தாங்கினார். ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி இரா.மனோகரி அவர்கள் பேரணியைத் துவக்கி வைத்தார். பேரணி பள்ளி கிராமத்தின் பல பகுதிகளையும் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கல்வி விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்களையும், பள்ளிச் செல்லாக் குழந்தைகள் பள்ளிச் செல்ல வேண்டிய அவசியம் குறித்த முழக்கங்களையும் முழங்கி வந்தனர். பேரணி முடிவில் மூன்று குழந்தைகள் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்.






புதன், 19 மே, 2010

2010-11 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழா மற்றும் இலவச பாடநூல்கள் வழ்ங்கும் விழா!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2010 - 2011 கல்வி ஆண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையும், 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசப் பாட நூல் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான திரு. இராதா நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.திருவேங்கடம் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் இப்பள்ளியின் பல்வேறு சிறப்புகளையும் எடுத்துக் கூறியதோடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு செய்து தரும் பல நலத்திட்ட உதவிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் பேசிய கிராமக் கல்விக் குழுத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் மிகச் சிறப்பான பெயர் பெற்று விளங்கும் இப்பள்ளிக்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறினர்.
                           அடுத்து முதல் வகுப்புச் சேர்க்கையை துவக்கி வைத்தும், இலவசப் பாடநூல்களை வழங்கியும் சிறப்புரை ஆற்றிய ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு அ.வி. விஜய குமாரன் அவர்கள் ஒன்றிய, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்று வரும் இப்பள்ளி தேசிய பசுமைப் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட  பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளைக் கொண்டு திகழ்வதாகவும் இது ஓர் மேல் நிலைப் பள்ளிக்கு நிகராகத் திகழ்வதாகவும் கூறினார்.
                 இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு சே. லீலா கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
              















புதன், 31 மார்ச், 2010

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் பாராட்டு

                                   கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.எம்.கே.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (30.03.2010) எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டார். அது போழ்து அவர் ஒன்று முதல் எட்டு வரையிலான அனைத்து வகுப்பு மாணவர்களையும் வகுப்பு வாரியாக சோதித்தார். பின்னர் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுபுற தூய்மையைக் கண்டும், பள்ளியில் மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்ச் செடிகளைக் கண்டும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
                     பள்ளிக்கென தனியே நடத்தி வரும் இணைய வலைப்பூ பற்றி ஆர்வத்தொடு அறிந்து  மகிழ்ந்தார். பார்வையின் போது அவர் தெரிவித்த ஊக்க மொழிகளும், ஆலோசனைகளும் எமது பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு மேலும் பயன்படும். அவருக்கு எமது பள்ளியின் சார்பிலான நன்றிகள்.


உலக தண்ணீர் தினம் !

கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.
                       பள்ளித் தலைமையாசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஊத்தங்கரை பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளர் திரு எம்.நவீந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
          விழாவில் இன்றைய உலகில் தண்ணீரின் அவசியம் பற்றியும் அதை பாதுகாப்பாகவும்,சிக்கனமாகவும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் தண்ணீரின் பயன்பாடு குறித்த உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான் விழிப்புணர்வை ஊட்டும் பாடல்கள் மற்றும் கதைகள் கூறப்பட்டது.
விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் ஊத்தங்கரை கிளையின் மூலம் பெண்குழந்தைகள் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவிக்கு வங்கி மேலாளர் காசோலை வழங்கினார்.