புதன், 19 மே, 2010

2010-11 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விழா மற்றும் இலவச பாடநூல்கள் வழ்ங்கும் விழா!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கொட்டுகாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2010 - 2011 கல்வி ஆண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையும், 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசப் பாட நூல் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளிக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான திரு. இராதா நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.திருவேங்கடம் அவர்கள் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் இப்பள்ளியின் பல்வேறு சிறப்புகளையும் எடுத்துக் கூறியதோடு அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு செய்து தரும் பல நலத்திட்ட உதவிகள் மற்றும் கற்றல் கற்பித்தல் வசதிகள் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் பேசிய கிராமக் கல்விக் குழுத் தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோர் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் மிகச் சிறப்பான பெயர் பெற்று விளங்கும் இப்பள்ளிக்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறினர்.
                           அடுத்து முதல் வகுப்புச் சேர்க்கையை துவக்கி வைத்தும், இலவசப் பாடநூல்களை வழங்கியும் சிறப்புரை ஆற்றிய ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திரு அ.வி. விஜய குமாரன் அவர்கள் ஒன்றிய, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளிலும் பங்கு பெற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்று வரும் இப்பள்ளி தேசிய பசுமைப் படை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட  பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளைக் கொண்டு திகழ்வதாகவும் இது ஓர் மேல் நிலைப் பள்ளிக்கு நிகராகத் திகழ்வதாகவும் கூறினார்.
                 இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு சே. லீலா கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
              















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக