திங்கள், 10 அக்டோபர், 2022

இரண்டாம் பருவம் இனிய பருவம்.......



    இன்று (10.10.2022)  2022-23 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவத் தொடக்க நாள். 
பள்ளி தொடங்கும் முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா பாட நூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் இன்று பள்ளிக்கு வந்திருந்த 6 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், விலையில்லா பாடநூல்களும், பாடக்குறிப்பேடுகளும் வழங்கப்பட்டன.

    1 முதல் 5 வகுப்புகள் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் எனும் 3 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால், 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை.  

    மாணவர்களுக்கான விலையில்லா பாடநூல்கள் மற்றும் பாடக் குறிப்பேடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் வழங்கினார். அப்போது அவர் இரண்டாம் பருவம் இனிய பருவமாக எல்லோருக்கும் அமைய வேண்டும் என வாழ்த்தினார்.

    நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் திருவாளர்கள் ச. மஞ்சுநாதன், வெ. சண்முகம், தற்காலிக ஆசிரியர் ம. யோகலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர். 





வெள்ளி, 16 செப்டம்பர், 2022

சர்வதேச ஓசோன் நாள்...

  


           ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (16.09.2022) சர்வதேச ஓசோன் நாள் விழா நடைபெற்றது..

       முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். பள்ளி உதவி ஆசிரியர் வெ. சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் சர்வதேச ஓசோன் நாள் பற்றியும், அதன் விளைவுகள் தடுக்கும் முறைகள் பற்றியும் விரிவான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார்.

         இன்றைய ஓவியப் போடியில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

                                             
     இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 






























வியாழன், 15 செப்டம்பர், 2022

பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றல்..... தமிழ் நுண் பயிலரங்கம்

 


           இன்று (15.09.2022) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்ணாவின் பேச்சாற்றல் எனும் தலைப்பில் தமிழ் நுண் பயிலரங்கம் நடைபெற்றது. 

        இப்பயிலரங்கில் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாறு, அரசியல் வாழ்வு பற்றி எடுத்துக் கூறிய அதே வேளையில் அவரின் சிறப்புக்கு மிகவும் காரணமாக அமைந்த பேச்சாற்றல் பற்றி விரிவாகவும் பல்வேறு மேடைப் பேச்சுகள் மேற்கோள் காட்டப்பட்டும் எடுத்துரைக்கப்பட்டது. 

    இப்பயிலரங்கை ஒரு ரூபாய் அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் தலைவரும், இப்பள்ளியின் தலைமை ஆசிரியருமான  கவி.செங்குட்டுவன் (எ) செ. இராஜேந்திரன் அவர்கள் நடத்தினார். இதில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் 17 பேர் பங்கேற்றனர். 

        இந்நிகழ்வில் அவர்கள் பங்கேற்றதன் மூலம் இன்று அனைவராலும்  பிறந்த நாள் கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.ந. அண்ணாதுரை அவர்களைப் பற்றியும் அவரின் தனித்த பேச்சாற்றல் பற்றியும் தெளிவாக அறிந்துக் கொண்டனர்.