ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று
(14.11.2019) *குழந்தைகள் நாள் விழா* நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பேசிய தலைமை ஆசிரியர் தனது உரையில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் திரு ஜவகர்லால் நேரு அவர்களது பிறந்த நாள் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது எனவும், அதற்கான காரணம் அவர் குழந்தைகள் மீது கொண்ட அன்பு என்றும், இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரின் தீவிர பங்களிப்பு பற்றியும் விரிவாக கூறினார்.
பின்னர் மாணவர்கள் கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேச்சு ஆகியவற்றில் தமது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்ட பின்னர் பள்ளி உதவி ஆசிரியர் திரு வே
இராஜ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.