வியாழன், 20 செப்டம்பர், 2018

பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் ......


ஊத்தங்கரைஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 20.09.2018 ல் டெங்கு விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் டெங்கு விழிப்புணர்வு முகாம் தொடர்பான பல்வேறு செய்திகளையும், இம்முகாமின் அவசியம் குறித்தும் விரிவாகக் கூறி, மாணவர்கள் வருமுன் காப்போம் எனும் கருத்துக்கு ஏற்ப நோய்கள் தம்மை அனுகும் முன் நாம் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுத்துக் கொள்ளலாம் எனவும், அதற்காக நாம் நமது பள்ளி, வீடு, சுற்றுபுறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள  வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் சிறப்பு அழைப்பாளராக வந்து கலந்துக் கொண்ட காரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் திரு சி. துரைராஜ் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான கருத்துக்களையும், டெங்குவை பரப்பும் கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.   
முன்னதாக பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுகாதார உறுதி மொழியை ஏற்றனர்.
தொடர்ந்து அனைவருக்கும் நிலவேம்பு வடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் உதவி ஆசிரியர், திருமதி த. லதா, சத்துணவு அமைப்பாளர் திரு பீமன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி நா. திலகா, அனைவருக்கும் நன்றி கூறினார்.


























திங்கள், 17 செப்டம்பர், 2018

தந்தைப் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா .....


                    இன்று (17.09.2018) எமது ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தந்தைப் பெரியாரின் 140வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.















புதன், 5 செப்டம்பர், 2018

ஆசிரியர் தினவிழா - 2018



ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (05.09.2018) ஆசிரியர் தினவிழா நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் முன்னால் இந்திய குடியரசுத் தலைவர் திரு சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினவிழாவாக கொண்டாடப் படுவது குறித்தும்,  ஆசிரியர் தினவிழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் வருங்காலத் தூண்கள் ஆசிரியர்களாலேயே உருவாக்கப்படுகிறது என்பது குறித்தும் கூறி, ஆசிரியர்களின் தியாகப் பணிகளை போற்றி பாராட்டியதோடு. அவர்களை இச்சமூகம் போற்றி பாராட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்
தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களின்  பணிகளைப் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கினார்..
பின்னர் மாணவர்கள் தமது வகுப்பு ஆசிரியர்கள் பற்றியும் அவர்களின் கற்பித்தல் பற்றியும் கூறி வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டதோடு, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.