ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
திங்கள், 14 நவம்பர், 2022
லாலிபாப்போடு குழந்தைகள் நாள் விழா 2022........
திங்கள், 10 அக்டோபர், 2022
இரண்டாம் பருவம் இனிய பருவம்.......
வெள்ளி, 16 செப்டம்பர், 2022
சர்வதேச ஓசோன் நாள்...
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (16.09.2022) சர்வதேச ஓசோன் நாள் விழா நடைபெற்றது..
முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திரு பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். பள்ளி உதவி ஆசிரியர் வெ. சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் சர்வதேச ஓசோன் நாள் பற்றியும், அதன் விளைவுகள் தடுக்கும் முறைகள் பற்றியும் விரிவான செய்திகளை பகிர்ந்துக்கொண்டார்.
இன்றைய ஓவியப் போடியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் ச. மஞ்சுநாதன் அனைவருக்கும் நன்றி கூறினார்.