திங்கள், 15 ஜூலை, 2019

கல்வி வளர்ச்சி நாள் விழா - 2019



இன்று 15.07.2019 திங்கட்கிழமை எமது பள்ளியில் பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் கர்ம வீரர் காமராசரின் 117வது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.  இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். பின்னர் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி த. லதா, திருமதி ந. திலகா ஆகியோர் காமராசர் குறித்தும் அவரின் பணிகள் குறித்தும் கருத்துரை வழங்கினர்.   
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.  இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் கல்வி வளர்ச்சி நாள் விழா குறித்தும், அதற்கான அவசியம், காரணம் மற்றும் இந்நாளில் பிறந்த கர்ம வீரர் என்று அனைவராலும் போற்றப்படும் காமராசர் குறித்தும் விரிவாக விளக்கி இவ்விழா கொண்டாடப்படுவதன் அடிப்படை வரலாறு குறித்தும் விரிவாக பேசியதோடு, அனைவரும் அவரின் வாழ்க்கை நிகழ்வுகளை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தை செயற்படுத்தும் நோக்கத்தில், பள்ளி வளாகத்தில் கைப்பம்பு மூலம் வெளியேறும் உபரி நீரை சேகரிக்கும் குழி மாணவர்கள் மூலம் அமைக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
தொடர்ந்து பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள் குறித்தும் காமராசர் குறித்தும் சிறப்பாக பேசியும், பாடல்களைப் பாடியும் விழாவை சிறப்பித்தனர்.
பின்னர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட ஊத்தங்கரை வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் திரு ப. சிவப்பிரகாசம் சிறப்புரை ஆற்றிவிட்டு, பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
                இறுதியில் எட்டாம் வகுப்பு மாணவி ச. இதம் அனைவருக்கும் நன்றி கூறினார்.



























































திங்கள், 1 ஜூலை, 2019

மாணவர்களுக்கு அர்ப்பணிப்பு.......





            
             தமிழ்நாடு டிஜிடல் டீம் மற்றும் ஆசிரியர்.காம் இணைந்து ஆர்.எம்.என் மகால், சிங்கபெருமாள் கோயில், சென்னையில் நடத்திய விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஒளிரும் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. 

              தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், சிறந்த தகவல் தொழிற்நுட்பக் கல்வி, கணினிப் பயன்பாடு மற்றும் சமூக சேவை அளித்து மாணவர்ளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய ”ஒளிரும் ஆசிரியர்” எனும் சிறப்பு விருது தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குநர் திரு கே. குணசேகரன் அவர்களால் வழங்கப்பட்டது. 

              இவ்விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் ஆகிய என்னையும், அவர்கள் தேர்வு விருது வழங்கினர். விருது வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்ளும் அதே வேளையில், இவ்விருது பெற காரணிகளாக அமைந்த எமது பள்ளி மாணவர்களுக்கு நன்றியை கூறிடும் முகத்தான், எனக்கு வழங்கப்பட்ட ” ஒளிரும் ஆசிரியர்” விருதை எமது பள்ளி மாணவர்களுக்கு இன்று அர்ப்பணித்து மகிழ்ந்தேன். அதன் வெளிப்பாடாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எழுதுகோள்கள்(பேனா) மற்றும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தேன்.
















ஒளிரும் ஆசிரியர் விருது………..




தமிழ்நாடு டிஜிடல் டீம் மற்றும் ஆசிரியர்.காம் இணைந்து ஆர்.எம்.என் மகால், சிங்கபெருமாள் கோயில், சென்னையில் நடத்திய விழாவில்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து ஒளிரும் ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களில், சிறந்த தகவல் தொழிற்நுட்பக் கல்வி, கணினிப் பயன்பாடு மற்றும் சமூக சேவை அளித்து மாணவர்ளின் மேம்பாட்டுக்கு பாடுபட்டு வரும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழுடன் கூடிய ”ஒளிரும் ஆசிரியர்” எனும் சிறப்பு விருது தமிழ்நாடு தொடக்கக் கல்வி துணை இயக்குநர் திரு கே. குணசேகரன் அவர்களால் வழங்கப்பட்டது.
இவ்விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் தமிழ்நாடு டிஜிடல் டீம் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப. இரமேஷ், ஆசிரியர்.நெட் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ச. சரவணன், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன உதவிப் பேராசிரியர் முனைவர். இர. ஆசிர்ஜூலியஸ், புதிய தலைமுறைக் கல்வி இதழின் உதவி ஆசிரியர் திரு மோ. கணேசன். கல்வியாளர் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு சிகரம் சதீஷ்குமார், தகவல் தொழிற் நுட்பக் கல்வி தேசிய விருதாளர்கள் திரு ஸ்ரீ. திலீப்குமார், திரு எஸ். சைமன் பீட்டர்பால், திரு பி. கருணைதாஸ், திரு ஜி. சங்கர் ஆகியோர்  கலந்துக்கொண்டனர்.