சனி, 22 ஜூன், 2019

சர்வதேச யோகா தினவிழா – 2019




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று  (21.06.2019) சர்வதேச யோகா தினவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளித்  தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்  அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

பின்னர் பேசிய பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ .இராஜேந்திரன் அவர்கள் யோகா தினவிழா கொண்டாடப்படுவதன் அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை விரிவாக கூறியதோடு, பாரதத்தின் பழம்பெரும் கலையான யோகக் கலையை அனைவரும் கற்று தமது உடல் மற்ற்ம் உள்ள ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின்   வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது எனவும் கூறினார்,

நிகழ்வில் மனவளக் கலை துணை பேராசிரியர் திருமதி சரஸ்வதி, திருப்பத்தூர் ஜேசீஸ் சங்கத் தலைவர் திரு இராம்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்டனர்.
மனவளக்கலை துணைப் பேராசிரியர் மாணவர்களுக்கு பாரம்பர்ய உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான உடற்பயிற்சி மற்றும் யோகா தொடர்பாக கருத்துரைகளை வழங்கி பயிற்சி வழங்கினார்..








































புதன், 12 ஜூன், 2019

பள்ளியில் தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு தினவிழா - 2019



ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று 25.06.2019 ல் தேசிய குழந்தைத் தொழிலாளர்  ஒழிப்பு விழிப்புணர்வு தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் தொடர்பான பல்வேறு செய்திகளையும், இந்நிகழ்வின் அவசியம் குறித்தும் விரிவாகக் கூறி, பொதுமக்களும், பெற்றோர்களும் மத, இன, மொழி வேறுபாடுகள் பாராமலும், சுதந்திரமாகவும் செயல்பட்டு அனைத்து பள்ளி வ்யதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டுமெனவும், குழந்தைத் தொழிலாளர்களாக எங்கும் பணியில் சேர்க்ககூடாது எனவும்  கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழியை ஏற்றனர்.
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி த. லதா அனைவருக்கும் நன்றி கூறினார்.










செவ்வாய், 11 ஜூன், 2019

வாழ்த்துகள்.........


             தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (NMMS) வெற்றி பெற்று தமக்கும், பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுத்துவிட்டு உயர்நிலை பள்ளிக்குச் செல்லும் எமது பள்ளி மாணவி ச. இனியா விற்கு துபாய் வாழ் கல்வி ஆர்வலர் பொறியாளர் திரு இரவி. சொக்கலிங்கம் அவர்கள் வழங்கிய பதக்கம் மற்றும் சிறப்புச் சான்றிதழ் வழங்கி வழியனுப்பி வைத்தோம்.... புதிதாக சென்று சேரும் பள்ளியிலும் இதேபோல் சிறப்பிடம் பெற வாழ்த்துகள்.....