ஊத்தங்கரை ஒன்றியம் ,ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில் இன்று 25.06.2019 ல் தேசிய
குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு
தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி
அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு
தினம் தொடர்பான பல்வேறு செய்திகளையும், இந்நிகழ்வின் அவசியம் குறித்தும் விரிவாகக்
கூறி, பொதுமக்களும், பெற்றோர்களும் மத, இன, மொழி வேறுபாடுகள் பாராமலும், சுதந்திரமாகவும்
செயல்பட்டு அனைத்து பள்ளி வ்யதுக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க
வேண்டுமெனவும், குழந்தைத் தொழிலாளர்களாக எங்கும் பணியில் சேர்க்ககூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும்,
மாணவர்களும் தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு
விழிப்புணர்வு தின உறுதிமொழியை ஏற்றனர்.
இறுதியில் உதவி ஆசிரியர் திருமதி த. லதா
அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக