இன்று (03.10.2019) ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில் அண்ணல் காந்தியின்
150வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலையில் மகாத்மா காந்தியின் திருஉருவப்
படத்திற்கு மலர்மாலை சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் படி கிராமத்தில் பல்வேறு தெருக்களில் ஊர்வலமாகச்
சென்று நெகிழி குப்பைகளை சேகரித்து குப்பைத்
தொட்டியில் சேர்த்தனர்
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்களின் தலைமையில்
நடைபெற்ற விழாவில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி
மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும்
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களின் திறமையை பேச்சு, கட்டுரை, கவிதை,
பாடல், போன்றவை மூலம் வெளிப்படுத்தினர்.
விழாவில் உதவி ஆசிரியர் திரு வே. இராஜ்குமார்
வாழ்த்துரை வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் மகாத்மா காந்தியின்
150 வது பிறந்த நாள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களயும், அவரின் வாழ்க்கையில் நடந்த
பல்வேறு நிகழ்வுகளையும் எடுத்துக் கூறி மாணவர்கள் மகாத்மா காந்தியின் வாழ்க்கையையே
பாடமாக கற்று தமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இறுதியில் பள்ளியின் பகுதி உதவி ஆசிரியர்
திரு ஜி.எம். சிவக்குமார் அனைவருக்கும் நன்றி
கூறினார்.