ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
சனி, 15 ஆகஸ்ட், 2026
இந்திய சுதந்திர நாள் மற்றும் பள்ளி கலைத் திருவிழா விழா 2026.....
இந்திய சுதந்திர நாள் மற்றும் பள்ளி கலைத் திருவிழா விழா.....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் Airport ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2026) *இந்திய சுதந்திர நாள் மற்றும் பள்ளி கலைத் திருவிழா விழா* நடைபெற்றது.
முன்னதாக பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில் மூவர்ண தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், கோ. ஆனந்தன், பயாஸ்பாஷா, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம், சிறப்பு அழைப்பாளர்கள் கார்த்திகேயன், இரமேஷ், கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் பேச்சு, பாடல், வில்லுப்பாட்டு, கதை கூறுதல், உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து 1 முதல் 8 வரையிலான மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து போட்டி நிகழ்வுகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் அனைத்து மாணவர்கள் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவர்க்கும் இனிப்பு மற்றும் அசைவ உணவு ஆசிரியர்கள் சார்பில் வழங்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
















































































































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக