ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (21.06.2019) சர்வதேச யோகா தினவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் பேசிய பள்ளித்
தலைமை ஆசிரியர் திரு செ .இராஜேந்திரன் அவர்கள் யோகா தினவிழா கொண்டாடப்படுவதன்
அவசியம் மற்றும் இவ்விழா நாள் உலகம் முழுமையும் கொண்டாடப்படுவற்கான காரணம் ஆகியவற்றை
விரிவாக கூறியதோடு, பாரதத்தின் பழம்பெரும் கலையான யோகக் கலையை அனைவரும் கற்று தமது
உடல் மற்ற்ம் உள்ள ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறி, ஐக்கிய நாடுகள்
சபையின் வேண்டுகோளுக்கினங்க ஒவ்வோராண்டும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது
எனவும் கூறினார்,
நிகழ்வில் மனவளக் கலை துணை பேராசிரியர் திருமதி சரஸ்வதி, திருப்பத்தூர் ஜேசீஸ் சங்கத் தலைவர் திரு இராம்குமார்
ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துக் கொண்டனர்.
மனவளக்கலை துணைப் பேராசிரியர்
மாணவர்களுக்கு பாரம்பர்ய உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான உடற்பயிற்சி
மற்றும் யோகா தொடர்பாக கருத்துரைகளை வழங்கி பயிற்சி வழங்கினார்..