புதன், 15 ஆகஸ்ட், 2018

72 வது இந்திய சுதந்திர தினவிழா



ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (15.08.2018) 72வது இந்திய சுதந்திர தினவிழா நடைபெற்றது.
முன்னதாக காலை சரியாக 9.30 மணிக்கு பள்ளியில் இந்திய தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
பின்னர் நடைபெற்ற சுதந்திர தினவிழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இந்திய குடியரசு தினவிழாவின் சிறப்பு குறித்தும், இவ்விழா நடத்தப்படுவதன் காரணம் குறித்தும் விரிவாக விளக்கியதோடு நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் அவர்கள் நாட்டுக்குச் செய்த தியாகங்கள் குறித்தும் கூறி அது போல மாணவர்களும் சமுதாயத் தொண்டு ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாணவர்கள் இந்திய சுதந்திர தினவிழா குறித்து உரையாடினர், மேலும் தேசபக்திப் பாடல்களைப் பாடினர், மேலும் சுதந்திர தினவிழாவை போற்றும் வகையில் குழு நடனம், தனி ஓப்பனை, நாடகம், கவிதை ஆகியவற்றை மாணவர்கள் சிறப்பாக வழங்கினர்.
அடுத்து  விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்ட ஒன்றிய வளமைய மேற்பார்வையாளர் திருமதி இரா. வசந்தி, வள மைய ஆசிரியப் பயிற்றுனர் திரு பா. சிவப்பிரகாசம் ஆகியோர் இப் பள்ளியின் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி, சிறப்புரை ஆற்றினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திருமதி ந. திலகா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
         விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள், திருமதி த. லதா, பள்ளி சத்துணவு அமைப்பாளர் திரு பீமன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி கு. ஆனந்தி உள்ளிட்ட அதிக அளவிலான பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக