சனி, 30 ஜூலை, 2016

அறிவியல் கண்காட்சி - 2016




ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (29.07.2016) அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியை ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு அ. யுவராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.  முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது தலைமை உரையில் இன்று அறிவியல் கண்காட்சி நடத்தப்படுவதன் நோக்கம் பற்றியும் இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் அறிவியல் மனப்பான்மை பற்ரியும் விரிவாக விளக்கினார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் மற்றும் கற்றல் கற்பித்தல் துணைக் கருவிகளை  செயல்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி வீடு மற்றும் தெருவிளக்குகளை எரியச் செய்தல், விவசாயத்திற்கு பயன்படுத்துதல், மீள்மாற்றம், மீளாமாற்றம், நீரில் விளக்கு எரியவைத்தல், மாய முட்டை, எரிமலை உருவாதல், விதை முளைத்தல், கணித சூத்திரங்களை பயன்படுத்துதல், கோணங்களை உருவாக்குதல், கணிதப் புதிர்கள், ஐவகை நிலங்கள், காடுகள் மற்றும் பாலைவனம் மாதிரி, பதிணென் கீழ்க்கணக்கு, பதிணென் மேற்கணக்கு நூல்கள், தேசிய கொடியின் தத்துவங்கள், மூவேந்தர்கள், மூலிகைச் செடிகள் அவற்றின் மருத்துவ குணங்கள், காய்கறிகள் அவற்றின் பயன்கள், நீரின் மூலம் பரவும் தாவரங்கள், காற்றின் மூலம் பரவும் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் மூலம்  பரவும் தாவரங்கள் ஆகியவை பற்றி மாணவர்கள் விரிவாகக் கூறினர்.
1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தமது படைப்புகளான மனித எலும்பின் வகைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் பெயர்கள், காய்கறிகளின் பெயர்கள், வேர், தண்டு, இலை, பூ,காய் கனி ஆகியவற்றில், உணவை சேமித்து வைக்கும் தாவரங்கள், மண்ணின் வகைகள் அவற்றில் வளரும் தாவரங்கள் ஆகியவற்றை ஆங்கிலத்திலேயே கூறினர்.
கண்காட்சியில் இடம்பெற்ற புதிய 4D எனும் தொழிற்நுட்பம் மூலம் விலங்கள் மற்றும் பறவைகள் ஆகியவற்றை கண்ட மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியை வெளிக்காட்டினர்.
அடுத்து இறுதியாக இடம்பெற்ற காற்றின் அழுத்தத்தால் இயக்கப்பட்ட இராக்கட் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.
இன்றைய கண்காட்சி நிகழ்வில் ஊத்தங்கரை ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு இரா. விஜயராஜ், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி த. மகேஸ்வரி, ஊத்தங்கரை ஒன்றியையேற்பார்வையாளர் ிரு கா.நேரு, ஆசிரியப் பிற்றுனர் ிரு சிவிராசம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு பொ. பொன்னுசாமி, உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு  இரா. இரவி, ஓவிய ஆசிரியர் திரு இ. சாகுல் அமீது உள்ளிட்ட 4 ஆசிரியர்களும், ஊத்தங்கரை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் திரு செ. ஆனந்த், திருமதி வெண்மதி உள்ளிட்ட 7 ஆசிரியர்களும், 250 க்கும் மேற்பட்ட மாணவர்களும், கெங்கபிராம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மா. அனுசுயா, ஆசிரியர்கள் திருமதி அனிதா, ஆகியோரும் 50க்கும் மேற்பட்ட மாண்வர்களும், துறிஞ்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்  திருமதி கா.க.சாந்தி உள்ளிட்ட மாணவர்களும், சின்னக்காரப்பட்டு பட்டதாரி ஆசிரியர் திருமதி சு. சாரதா ஆகியோரும் கலந்துக்கொண்டு பார்வையிட்டனர்.
அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்விக் குழுமங்களின் தாளாளர் திரு வே. சந்திரசேகர் அவர்கள் அனைத்து மாணவர்களின் படைப்புகளையும் தனித்தனியே நின்று பார்த்து அவர்களுக்கு வாழ்த்தையும், ஆசியையும் கூறியது மிகவும் பெருமைக்குறிய நிகழ்வாகும்.
கிராமப்புற மாணவர்கள் கற்றலைத் தேடி நகர்புற பள்ளிகளை நோக்கி செல்லும் இக்காலத்தில் நகர்ப்புற மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புற பள்ளியான எமது பள்ளியை நோக்கி வந்தது கிராமப்புற பள்ளியில் பணியாற்றும் எங்களுக்கும், இங்கு படிக்கும் எமது மாண்வர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், அதற்கு உரிய அனுமதி அளித்த அப்பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் எங்கள்  நன்றி என்றும் உரியது.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் மு. இலட்சுமி, ந. திலகா, த. லதா, வே. வஜ்ஜிரவேல், அ. நர்மதா ஆகியோர் செய்திருந்தனர்.