ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு,
முன்னதாக பள்ளி அறிவியல் பட்டதாரி உதவி ஆசிரியர் திருமதி மு. இலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தமது தலைமை உரையில் இன்று தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்படுவதன் நோக்கம் மற்றும்
அதற்குக் காரணமாக அமைந்த, இந்தியாவின் முதல் நோபல்
பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் திரு சர்.சி.வி.
இராமன் அவர்களைப் பற்றியும்
விரிவாக எடுத்துக்கூறி, அவரின் ”இராமன்
விளைவு” எனும் ஆய்வறிக்கை
வெளியிடப்பட்ட (பிப்ரவரி 28) நாளினை நினைவு கூறும் வகையிலேயே 1987ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இவ்விழா
தேசிய அறிவியல் நாளாக நாடு முழுமையும்
கொண்டாடப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
பின்னர் பள்ளி மாணவர்கள் 10க்கும் மேற்பட்ட
எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினர்,
தொடர்ந்து கணிதப் புதிர்கள் கூறப்பட்டு மாணவர்கள் அதற்கு விடை அளித்தனர்.
பின்னர் நிகழ்வில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும்
பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர்
திருமதி நா. திலகா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் பள்ளி உதவி ஆசிரியர்கள் திருமதி
த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் ஆகியோரும் பள்ளி மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக